ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் நீங்கள் எந்த ஒரு முடிவுகளையும் கவனமாக எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அதனால் நிறைய இடைறுகளை சந்திக்க நேரிடும். எதிர்மறை எண்ணங்களில் இருந்து விலகி, உங்கள் அன்றாட பணிகளில் முழு கவனத்தை செலுத்தினால் நல்ல பலனைப் பெறலாம். தொட்ட காரியத்தில் எல்லாவற்றிலும் நல்ல வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் எதையும் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெற முடியும். அடுத்தவர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நன்மையை தரும். ஏற்கனவே பாதியில் நின்ற பணிகள் மீண்டும் தொடங்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள முடியும்.
உங்கள் விருப்பத்திற்கு மாறாக ஒரு சில காரியங்கள் நடக்கலாம் என்பதால், எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குல தெய்வ வழிபாடுகளை தவறாமல் மேற்கொள்ளவும். குடும்பத்தில் உள்ளவர்களால் சந்தோஷம் ஏற்படும். கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மையை தரும். சில இக்கட்டான சூழ்நிலையில் உறவினர்கள், நண்பர்கள், உங்களுக்கு உதவி செய்வர். பண நெருக்கடி ஓரளவு குறையும். கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை. உங்கள் காரிய வெற்றிக்கு தேவையான அணைத்து உதவியும் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த சிக்கல் தீரும். தொழிலில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழில் ரீதியாக இந்த மாதம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.
சந்திராஷ்டமம் : 25,26,27 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com